Last Updated:

Cricket Player Selection| தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் பிப்ரவரி மாதம் திண்டுக்கல்லில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

Tamilnadu cricket selection 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு, தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு வருகிற 12.01.2025 ஞாயிறு அன்று தூத்துக்குடி மீளவிட்டான் சாலை சின்னகண்ணுபுரம் கிரன் ப்ரோஸ் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் வைத்து மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி 1999 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். தேர்வில் கலந்துகொள்ளும் வீரர்கள் (கிரிக்கெட் whites, விளையாட்டு உபகரணங்கள்) ஆதார் நகல் pdf, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ pdf, பிற்போக்குச் சான்றிதழ் pdf வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வாகும் வீரர்கள் அனைவருக்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் பிப்ரவரி மாதம் திண்டுக்கல்லில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு செயலாளர் J. கிறிஸ்பின் (8015621154) இணைச் செயலாளர் S. சுப்பிரமணியன் (8754004377) மற்றும் துணைச் செயலாளர் SDR சாமுவேல்ராஜ் (9944833333) ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கிறிஸ்பின் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link