Last Updated:

Cricket Players Ashwin| அஸ்வின் ரவிசந்திரன் திடீர் ஓய்வு அறிவித்த நிலையில் சோகத்தில் ரசிகர்கள்.

Aswin

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

38 வயது நிரம்பும் அஸ்வினின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் வைத்து திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார் அஸ்வின். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆகியிருக்கும் நிலையில், அஸ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார். முன்னதாக கிரிக்கெட் பத்திரிகையாளர்களெல்லாம் ஒரு பெரிய வீரர் ஓய்வை அறிவிக்கப்போகிறார் என ட்வீட் செய்து வந்தனர்.

இந்நிலையில், அஸ்வின் இந்த திடீர் முடிவை எடுத்திருப்பதாக கூறினாலும் இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றாகத்தான் பலராலும் கருதப்படுகிறது. ஏனென்றால் அஸ்வின் முழங்காலில் ஏற்கனவே பிரச்சனை இருப்பதால் வெளிநாட்டு போட்டியில் அவரால் சரியாக பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

இதையும் வாசிக்க: Inspirational Story : தடை அதை உடை… தங்கங்களை குவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி…

13 ஆண்டுகளாக விளையாடி வந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் 265 விக்கெட்டுகளையும், 106 டெஸ்ட் போட்டிகள் பங்கேற்று 537 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல்ரவுண்டராக கலக்கியுள்ளார். அஸ்வின் இதுவரை 6 சதங்கள் உட்பட 3503 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியை போலவே தொடருக்கு இடையில் தனது ஓய்வை அஸ்வின் அறிவித்திருக்கக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link