Last Updated:
Dhanush | அதில் ஒரு போஸ்டரில் நெற்றியில் பட்டையும், கையில் காய்கறி, பாத்திரம் என அசல் கிராமத்து மனிதராக தனுஷ் நின்றுகொண்டிருக்கிறார். மற்றொரு போஸ்டரில் ராஜ்கிரணுக்கு அருகில் இள வயது தோற்றத்துடன் தாடி, மீசையில்லாமல் காட்சியளிக்கிறார்.
புத்தாண்டை முன்னிட்டு தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தையும் தனுஷே இயக்கினார். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார். தொடர்ந்து தனது 52-வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிசர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்துக்கு ‘இட்லி கடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கௌசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு போஸ்டரில் நெற்றியில் பட்டையும், கையில் காய்கறி, பாத்திரம் என அசல் கிராமத்து மனிதராக தனுஷ் நின்றுகொண்டிருக்கிறார். மற்றொரு போஸ்டரில் ராஜ்கிரணுக்கு அருகில் இள வயது தோற்றத்துடன் தாடி, மீசையில்லாமல் காட்சியளிக்கிறார். இந்த இரண்டு போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
January 01, 2025 6:14 PM IST