Last Updated:

Dil Raju | ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

News18

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’, வெங்கடேஷ் நடிப்பில் வெளியான ‘சங்கராதிகி வஸ்துனம்’ ஆகிய படங்களை தயாரித்தவர் தில் ராஜு.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் மாநில அரசின் தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையும் வாசிக்க: Box office | 75 கோடியில் 4 பாடல்கள்…ரூ.500 கோடி பட்ஜெட்…2025-ன் முதல் பாக்ஸ் ஆஃபீஸ் பின்னடைவு எந்தப் படம்?

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் 55 அதிகாரிகள் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சகோதரர் சிரிஷ், மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியோர் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அண்மையில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் வசூலை ரூ.186 கோடி என தில் ராஜு தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.



Source link