Last Updated:
Dubai Race | நமக்கு பிடித்த விஷயங்களில் நாம் கலந்துகொள்ளும்போது வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. அதே சமயம் தோல்வி அடைந்தால் சோர்ந்து போகாதீர்கள். போட்டி மிகவும் முக்கியம். மன உறுதி, அர்ப்பணிப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் அனைவரையும் அளவு கடந்து நேசிக்கிறேன்.
துபாயில் நடைபெறும் 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் கார் ஓட்டப் போவதில்லை என நடிகர் அஜித் குமார் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கார் பந்தயத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “மிகவும் சந்தோஷமாக இருந்தது. வாழ்க்கை முழுவதும் கார் பந்தயம் எனக்கு ஒரு பேஷனாக இருந்தது. நிறைய ரசிகர்கள் நேரில் வந்துள்ளனர். மிகவும் எமோஷனலாக உணர்கிறேன். நான் சொல்ல வேண்டிய விஷயம், சொல்லப்போற விஷயம் ஒன்னே ஒன்னு தான்.
நீங்கள் அனைவருக்கும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் குடும்பத்தை பாருங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றாக படியுங்கள். வேலைக்கு செல்லுங்கள். கடுமையாக உழைத்து வேலை பாருங்கள்.
Ak.
My fans
Their commitments. pic.twitter.com/5fW17Gghgu
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
நமக்கு பிடித்த விஷயங்களில் நாம் கலந்துகொள்ளும்போது வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. அதே சமயம் தோல்வி அடைந்தால் சோர்ந்து போகாதீர்கள். போட்டி மிகவும் முக்கியம். மன உறுதி, அர்ப்பணிப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் அனைவரையும் அளவு கடந்து நேசிக்கிறேன்.
24 மணி நேர போட்டியில் இரண்டு மூன்று ஓட்டுநர்கள் இருப்பார்கள். அதில் நிறைய பொறுப்புகள் உண்டு. இதில் வெற்றி பெற்றால் கூட்டு முயற்சியாக இருக்கும். எல்லோரும் அவரவர் கடமையை ஒழுங்காக செய்தாலே போதும் ரிசல்ட் தானாக வரும். சண்டை போடாதீர்கள். வாழ்க்கை மிகவும் குறுகியது. உங்கள் குடும்பத்தை பாருங்கள்” என்றார்.
January 12, 2025 6:50 AM IST