e-PAN மோசடியை மோசடிக்காரர்கள் எப்படி அரங்கேற்றுகிறார்கள்?
இதில் மோசடிக்காரர்கள் “Download e-PAN card Free Online: A Step-by-Step Guide” என்ற இமெயிலை அனுப்புகிறார்கள். இமெயிலில் உள்ள உள்ளடக்கம் உண்மையானவை போல தோன்றி e-PAN கார்டு டவுன்லோட் செய்வதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
இந்த இமெயில்களில் பெரும்பாலும் ஒரு லிங்க் இணைக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்தால் e-PAN கார்டை டவுன்லோட் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்யும்பொழுது, அது போலியான ஒரு வெப் பேஜுக்கு சென்று உங்களுடைய தனிநபர் விவரங்களை என்டர் செய்யப்படி கேட்கும். இதில் நீங்கள் பதிவு செய்யும் எந்த ஒரு தகவலும் நேரடியாக மோசடிக்காரரிடம் சேருகிறது. இதனை பயன்படுத்தி அவர்கள் அடையாளத் திருட்டு அல்லது பண மோசடியை செய்கின்றனர்.
வருமானவரித்துறையிடமிருந்து வந்துள்ள ஆலோசனை
மோசடிகளை அடையாளம் கண்டு அவற்றை தவிர்ப்பதற்கு வருமானவரித்துறை ஒரு சில வழிகாட்டுதல்களை அமைத்துள்ளது.
*சந்தேகத்திற்குரிய இமெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.
*எந்த ஒரு அட்டாச்மென்ட்களையும் திறக்க வேண்டாம்.
*லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்.
*லிங்குகளை காபி-பேஸ்ட் செய்ய வேண்டாம்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
*அப்டேட் செய்யப்பட்ட ஆன்டி வைரஸ், சாஃப்ட்வேர், ஸ்பைவேர் டூல்கள் மற்றும் ஃபயர் வால்கள் மூலமாக உங்களுடைய சாதனங்களை பாதுகாக்கவும்.
*சந்தேகத்திற்குரிய இமெயில்களை கையாளும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் சாஃப்ட்வேர் உங்களுடைய சாதனத்தை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது.
இந்த மாதிரியான போலி மோசடிகளை புகார் செய்வது எப்படி?
*உங்களுக்கு கிடைத்த இமெயில் அல்லது வெப்சைட் URL -ஐ [email protected] அனுப்பவும்.
*[email protected] -க்கு ஒரு நகலை அனுப்பி வையுங்கள்.
*சிறந்த டிராக்கிங் செய்வதற்கு இமெயிலில் இன்டர்நெட் ஹெட்டரை சேர்க்கவும்.
*புகார் அளித்த பிறகு இமெயிலை உங்களுடைய இன்பாக்ஸிலிருந்து டெலிட் செய்து விடவும்.
மோசடிகளை தவிர்ப்பதற்கு e-PAN கார்டு அதிகாரப்பூர்வ முறையில் எப்படி டவுன்லோட் செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
*இதற்கு முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்டல் ஹோம் பேஜுக்கு சென்று, இன்ஸ்டன்ட்
e-PAN ஆப்ஷன் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
*அடுத்து “கெட் நியூ e-PAN” என்பதை கிளிக் செய்யுங்கள். *உங்களுடைய ஆதார் நம்பரை என்டர் செய்துவிட்டு, செக் பாக்ஸை டிக் செய்து, கொடுக்கப்பட்டுள்ள விதிகளை ஏற்றுக்கொண்டு, OTP வேலிடேஷன் பக்கத்திற்கு செல்லுங்கள்.
*ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள OTP -ஐ என்டர் செய்து சப்மிட் செய்யவும்.
*வெற்றிகரமாக சமர்ப்பித்தவுடன் ஒப்புகை எண்ணுடன் கூடிய ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜை பெறுவீர்கள். இதே நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் நம்பருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும்.
விழிப்போடு இருக்கவும் வருமானவரித் துறை சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலையும் நீங்கள் வெரிஃபை செய்துவிட்டு மேலும் தொடர்வது அவசியம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக உங்களை நீங்கள் மோசடிகளில் இருந்து பாதுகாத்து, உங்களுடைய தனிநபர் மற்றும் பொருளாதார தகவல்களை சேமிக்கலாம்.
January 05, 2025 4:17 PM IST