உலகம் முழுவதும், ஒரு ஆடம்பர வீட்டை வாங்க $500,000 (ரூ. 4 கோடி) போதுமானது என்று தோன்றலாம். ஆனால் நியூயார்க் நகரில், அந்தத் தொகை உங்களுக்கு பார்க்கிங் இடத்தை வாங்குவதற்கு மட்டுமே பயன்படுகிறது. நியூயார்க்கின் மேற்கு கிராமத்தின்(West Village) சுற்றுப்புறத்தில் உள்ள 150 சார்லஸ் ஸ்ட்ரீட் காண்டோ பகுதியில் வசிப்பவர்களுக்கு, டெவலப்பர் அலெக்ஸ் விட்காஃப், பிரத்யேக பார்க்கிங் இடங்களை வழங்கியது.
இதன் விலை USD 500,000 (சுமார் ரூ. 4.19 கோடி) ஆகும். இந்த 15 அடுக்கு சொகுசு கட்டடத்தில் பென் ஸ்டில்லர், ஜான் பான் ஜோவி மற்றும் இரினா ஷேக் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் பணக்காரர்கள் வசித்து வருகின்றனர். மற்றொரு கட்டடமான, 42 Crosby St., ஒரு தசாப்தத்திற்கு முன்பு $1 மில்லியன் பார்க்கிங் ஸ்பாட்களை வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல், 150 சார்லஸ் St., என்பது 92 இடங்களை கொண்டுள்ளது. இந்த இடங்களில் பார்க்கிங் முன்பு வாடகைக்கு மட்டுமே விடப்பட்டன.
இந்நிலையில், இந்த பார்க்கிங் இடங்கள் வேகமாக விற்பனையாகி வருவதாகவும், நியூயார்க்கின் மேற்கு கிராமத்தில் ஒரு பெரிய பார்க்கிங் பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது காலப்போக்கில் மோசமாக வாய்ப்புள்ளது. மேலும், பல இடங்களில் கேரேஜ்கள் இல்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவில் பெரிய பார்க்கிங் ஸ்பாட் விலைகள் அதிகரித்து காணப்படுவது இது முதல் முறை அல்ல.
ஏப்ரல் மாதம், ரியல் எஸ்டேட் முகவர் பெட்ஸி ஹெரால்ட், பாஸ்டனில் உள்ள பீக்கன் ஹில்லில் உள்ள பிரிம்மர் ஸ்ட்ரீட் கேரேஜில் 500,000(ரூ. 4 கோடி) அமெரிக்க டாலர்களுக்கு வாகன நிறுத்துமிடங்களை விற்பனை செய்துள்ளார்.
நியூயார்க் நகரத்தைப் போலவே, பாஸ்டனில் பார்க்கிங் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்த ஹெரால்ட், பணக்காரர்கள் தங்கள் சொகுசு வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த பார்க்கிங்கில் கணிசமான அளவு முதலீடு செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
.