கடந்த இரண்டு ஆண்டுகளில், பந்தன் வங்கி, எஸ்பிஎம் பேங்க் இந்தியா ஆகியவை நிலையான வைப்புத் தொகைக்கு (FD) ஆண்டுக்கு 8 சதவீதத்திற்கு மேல் வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன.

நிலையான வைப்புத் தொகைகள் (FD) முதலீட்டாளர்களுக்கு நம்பகமான, நிலையான மற்றும் நீண்ட கால முதலீட்டு விருப்பங்களையும், வருமானத்தையும் வழங்குகின்றன. நிலையான வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம், டெபாசிட் செய்யும் தொகை மற்றும் கால அளவைப் பொறுத்து வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.

எனவே, ஒரு வங்கியில் நிலையான வைப்பு (FD) கணக்கைத் தொடங்குவதற்கு முன்பு, வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. இதன்மூலம், அதிக வட்டி விகிதங்களை வழங்கும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து அதிக வட்டியைப் பெறலாம்.

பல இந்திய வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில், என்னென்ன வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்.

1. நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது, 546 நாட்கள் முதல் 1111 நாட்கள் வரை (அதாவது, 1.5 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கு) 9% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

2. யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 1001 நாள் காலத்திற்கு (கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு) 9% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

3. சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில், 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத் தொகைகளுக்கு 8.60% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

4. உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கானது, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத் தொகைகளுக்கு 8.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

5. ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத் தொகைகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இதையும் படிக்க: SBI Bank | எஸ்பிஐ வங்கியில் ரூ.5 லட்சம் பர்சனல் லோன் பெற என்னென்னெ தகுதிகள்? – முழு விவரம் இதோ!

6. ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், 888 நாட்களுக்கு (தோராயமாக 2.5 வருடங்களுக்கு) 8.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

7. உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 12 மாதங்களுக்கான நிலையான வைப்புத்தொகைக்கு 8.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

8. எஸ்பிஎம் வங்கி இந்தியா

எஸ்பிஎம் வங்கி இந்தியா, 18 மாதங்களுக்கு மேலான மற்றும் 2 ஆண்டுகள் அல்லது 3 நாட்களுக்குக் குறைவான காலங்களுக்கான நிலையான வைப்புத்தொகைக்கு 8.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

9. பந்தன் வங்கி

பந்தன் வங்கியானது, 1 வருட கால நிலையான வைப்புத்தொகைக்கு 8.05% வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது.

10. டிசிபி வங்கி

டிசிபி வங்கி, 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான வைப்புத் தொகைகளுக்கு 8.05% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இதையும் படிக்க: Loan Waiver: உங்க மனைவி பெயரில் கடன் வாங்கியிருக்கீங்களா..? அப்ப இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்!

வங்கியில் நிலையான வைப்புத் தொகையை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் திறக்க முடியும். வங்கிக்குச் சென்று கேஒய்சி (KYC) விதிமுறைகளை முடிப்பதன் மூலம் நிலையான வைப்புத்தொகை கணக்கை திறக்கலாம். வங்கிகள் மற்றும் பிற தனியார் நிதி நிறுவனங்களுக்கு இடையே இந்தத் தொகை மாறுபடும் என்றாலும், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவில், வெறும் 100 ரூபாய்க்கு ஒரு நிலையான வைப்புத்தொகை கணக்கை துவங்க முடியும்.



Source link