ஃபிக்ஸட் டெபாசிட் ஆனது முதலீட்டின் பாதுகாப்பான வடிவமாகக் கருதப்படுகிறது. எனவே ஃபிக்ஸட் டெபாசிட்கள் இன்றைய காலத்தின் ஒரு பிரபலமான விருப்பமாகும். நாட்டில் உள்ள வங்கிகள் பொது மக்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை ஈர்க்க வங்கிகளும் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இப்போது நாட்டின் இந்த 5 வங்கிகளும் வட்டி விகிதத்தை மாற்றியுள்ளன.
கர்நாடகா வங்கி
கர்நாடகா வங்கி ஆனது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான புதிய ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொது மக்களுக்கான வட்டி விகிதங்கள் 3.5% முதல் 7.50% வரை கிடைக்கின்றன, அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் சில குறிப்பிட்ட காலங்களுக்கு 8% வரை வட்டி விகிதங்களைப் பெறலாம். 375 நாட்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் – இல் பொது மக்களுக்கான அதிகபட்ச வட்டி 7.50 சதவீதமாக இருக்கும் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.
கர்நாடகா வங்கியில் 7 முதல் 45 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 3.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேசமயம் 46 முதல் 90 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 4 சதவீத வட்டி கிடைக்கும். நீங்கள் 91 முதல் 179 நாட்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால், உங்களுக்கு 5.25 சதவிகித வட்டி கிடைக்கும். 180 நாட்களில் இருந்து 1 வருடத்திற்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 6.25 சதவீத வட்டி கிடைக்கும். இது தவிர, 1 முதல் 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 7.25 சதவீத வட்டியும், 375 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 7.50 சதவீத வட்டியும் கிடைக்கும். அதேசமயம் 2 முதல் 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 6.50 சதவீதமும், 5 முதல் 10 வருட ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 5.80 சதவீதமும் வட்டி இருக்கும்.
இதையும் படிக்க:
நகைப்பிரியர்களுக்கு அலர்ட்.. 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை என்ன தெரியுமா?
கனரா வங்கி:
கனரா வங்கி டிசம்பர் 1, 2024 முதல் ரூ. 3 கோடிக்கு மேல் டெபாசிட் செய்வதற்கான ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்களில் மாற்றங்களை அறிவித்தது. பொது மக்களுக்கான வட்டி விகிதங்கள் 4% முதல் 7.40% வரையிலும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் 4% முதல் 7.90% வரையிலும் விகிதங்களை பெறலாம்.
7 முதல் 45 நாட்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 4 சதவீத வட்டி கிடைக்கும். 46 முதல் 90 நாட்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 5.25 சதவீத வட்டி கிடைக்கும். 91 முதல் 179 நாட்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 5.5 சதவீத வட்டியை வங்கி வழங்கும். மறுபுறம், 180 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 6.25 சதவீத வட்டி கிடைக்கும். இது தவிர, 1 முதல் 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 6.85 சதவீதமும், 2 முதல் 3 வருட ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 7.30 சதவீதமும், 3 முதல் 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு 7.40 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.
யெஸ் வங்கி:
யெஸ் வங்கி அதன் வட்டி விகிதங்களை நவம்பர் 5, 2024 முதல் மாற்றியுள்ளது. இதன் கீழ் 18 மாத கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டியை ஆண்டுக்கு 8% லிருந்து 7.75% ஆக குறைத்துள்ளது. மாற்றத்தின் கீழ், பொது மக்களுக்கான வட்டி விகிதங்கள் 3.25% முதல் 7.75% வரையிலும், அதே சமயம் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் 3.75% முதல் 8.25% வரையிலும் விகிதங்களை பெறலாம். மேலும் 18 மாத காலத்திற்கான ஃபிக்ஸட் டெபாசிட்-இல் பொது மக்களுக்கான வட்டி விகிதங்கள் 7.75% வரையிலும் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் 8.25% வரையிலும் கிடைக்கும்.
இன்டசின்ட் வங்கி:
IndusInd வங்கி நவம்பர் 26, 2024 முதல் ரூ.3 கோடிக்கும் கீழ் உள்ள ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது. மாற்றத்தின் கீழ், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கான வட்டி விகிதம் 3.50% முதல் 7.99% வரை இருக்கும். அதே சமயம் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் அதே காலத்திற்கு 4% முதல் 8.49% வரை வட்டி பெறுவார்கள்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி:
IDFC First வங்கி நவம்பர் 26, 2024 முதல் 3 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கான வட்டி விகிதங்கள் 3% முதல் 7.90% வரையிலும், மூத்த மக்களுக்கான வட்டி விகிதங்கள் 3.50% முதல் 8.40% வரையிலும் விகிதங்களை பெறலாம்.
.