கார்த்திகை மாதம் தொடங்கியதாலும், மழைக்காலம் என்பதாலும் ராமேஸ்வரத்தில் மீன்களின் விலை சரிவை கண்டுள்ளது. கொள்முதல் நிலையம் இல்லாததால் மீன்களை உரிய விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்ய முடியவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரத்தில் இருந்து 300-க்கும் குறைவான விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு இலங்கை எல்லையை ஒட்டியுள்ள பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடித்துவிட்டு இன்று கரை திரும்பினர். மழைக்காலம் என்பதால் மீன்களின் வரத்து நன்றாக இருந்தாகவும், டன் கணக்கில் மீன்கள் கிடைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலத்தில் எப்போதுமே மீன்களின் விலை குறைவாகவே இருப்பது இயல்பு என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் கார்த்திகை மாதத்தில் ஐயப்பசுவாமி மற்றும் முருகனுக்கு மாலை அணிவித்து விரதம் மேற்கொள்ள பக்தர்கள் தொடங்குவார் என்பதால் மீன்கள் வரத்து அதிகம் இருந்தாலும் விற்பனை இன்றி உரிய விலை இல்லாமல் கடும் சரிவை சந்திக்க நேரிடும் என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் வாசிக்க: Fish Rate :கார்த்திகை மாதம் எதிரொலி… காத்து வாங்கும் மீன் மார்க்கெட்…
மேலும், மீனை கொள்முதல் செய்ய இடம் இல்லாமல் வியாபாரிகள் மீன்களை வாங்க வருவதில்லை, உரிய விலைக்கு எங்களால் விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் சொல்லும் விலைக்கே நஷ்டத்திற்கு மீன்பிடி தொழில் செய்வதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
700- விசைப்படகுகள் இருக்கும் இடத்தில் 300-க்கும் குறைவான விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க செல்கின்றன. இதனால் மீன்கள் கொள்முதல் நிலையம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் அமைக்க வேண்டும் என மீனவர் எமரிட் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.