இந்த பதிவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள்: ஃபிக்சட் டெபாசிட்ளுக்கான வட்டி விகிதம் என்பது அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியானது கிடையாது. சீனியர் சிட்டிசன்கள் வழக்கமான சிட்டிசன்களை விட டெர்ம் டெபாசிட்கள் அல்லது ஃபிக்சட் டெபாசிட்களுக்கு சற்று அதிகமான வட்டி விகிதங்களை பெறுகின்றன.
ஃபிக்சட் டெபாசிட் பலன்கள்: FD அக்கவுண்ட் பொறுத்தவரை உங்களுக்கு நிலையான வட்டி விகிதங்கள் கிடைக்கும். இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு ஆப்ஷனாக கருதப்படுகிறது.
ஃபிக்சட் டெபாசிட் கால அளவு: உங்களுடைய பணத்தை 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்யலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 1-வருட, 3-வருட, 5-வருட FD வட்டி விகிதங்கள்: ஒரு வருடத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சீனியர் சிட்டிசன்களுக்கு 7.30 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன மற்றும் 3 வருடம் மற்றும் 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% மற்றும் 7.50% வட்டி விகிதத்தை முறையே வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா: 1-வருட, 3-வருட, 5-வருட FD வட்டி விகிதங்கள்: பேங்க் ஆஃப் பரோடா சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு வருட FD திட்டத்திற்கு 7.35 சதவீத வட்டியும், 3 வருடங்களுக்கு 7.65 சதவீத வட்டியும், 5 வருடங்களுக்கு 7.15 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
ICICI வங்கி: 1-வருட, 3-வருட, 5-வருட FD வட்டி விகிதங்கள்: ICICI வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு வருட காலத்திற்கு 7.20% வட்டியையும், 3 வருடங்களுக்கு 7.50 சதவீத வட்டியையும், 5 வருடங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதத்தையும் அளிக்கிறது.
ஆக்சிஸ் வங்கி: 1-வருட, 3-வருட, 5-வருட FD வட்டி விகிதங்கள்: ஆக்சிஸ் வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு வருட FD திட்டத்தில் 7.20% வட்டியையும், 3 வருடங்களுக்கு 7.60 சதவீத வட்டியையும் மற்றும் 5 வருட திட்டத்திற்கு 7.75 சதவீத வட்டியையும் கொடுக்கிறது.
கனரா வங்கி: 1-வருட, 3-வருட, 5-வருட FD வட்டி விகிதங்கள்: கனரா வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு வருடத்திற்கு 7.35 சதவீத வட்டியையும், 3 வருடங்களுக்கு 7.30 சதவீத வட்டியையும், 5 வருடங்களுக்கு 7.20% வட்டியையும் வழங்குகிறது.
HDFC வங்கி: 1-வருட, 3-வருட, 5-வருட FD வட்டி விகிதங்கள்: HDFC வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு வருட FD திட்டத்திற்கு 7.10 சதவீத வட்டியையும், 3 வருடங்களுக்கு 7.50 சதவீதத்தையும், 5 வருடங்களுக்கு 7.50 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி: 1-வருட, 3-வருட, 5-வருட FD வட்டி விகிதங்கள்: பஞ்சாப் நேஷனல் வங்கி சீனியர் சிட்டிசனகளுக்கு ஒரு வருடத்திற்கு 7.30 சதவீத வட்டியையும், 3 வருடங்களுக்கு 7.50 சதவீத வட்டியையும், 5 வருடங்களுக்கு 7 சதவீத வட்டியையும் ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு வழங்குகிறது.
January 01, 2025 7:38 PM IST