Last Updated:
தவிர உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய நினைத்தால், நீங்கள் இன்னும் அதிகம் சேமிக்கலாம்
நீங்கள் ஐபோன் பிரியர் என்றால் ஒருவருட பழைய மாடல் அதாவது ஐபோன் 15 சலுகை விலையில் கிடைத்தால் சிறப்பு என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ள இதுவே சரியான நேரம். ஏனென்றால் ஐபோன் 15 தற்போது ஆண்டு இறுதி ஷாப்பிங் போனாஸாக ரூ.11,000 வரை தள்ளுபடியில் கிடைக்கிறது.
தள்ளுபடி விவரங்கள்: ஐபோன் 15 மாடலின் பேஸ் வேரியன்ட்டான 128GB மாடல் ரூ. 69,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் தற்போது ஃபிளிப்கார்ட்டில் ரூ.59,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறிப்பிடத்தக்க வகையில் ரூ.9,900 தள்ளுபடிவிலையில் கிடைக்கிறது ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் பிரீமியம் டிவைஸிற்கான மிகவும் கவர்ச்சிகரமான டீல்களில் ஒன்றாகும்.
இது மட்டுமின்றி, ஐபோன் 15 மொபைலில் நீங்கள் பச்சை நிற வேரியன்ட்டை தேர்வு செய்தால், கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியையும் பெறலாம், இதன் மூலம் இறுதி விலை ரூ.58,999-ஆக இருக்கும். இதன் மூலம் ஐபோன் 15-ல் அதிகபட்சமாக ரூ.10,900 வரை தள்ளுபடி கிடைக்கும்.
தவிர உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய நினைத்தால், நீங்கள் இன்னும் அதிகம் சேமிக்கலாம். இ-காமர்ஸ் இயங்குதளங்களில் எக்ஸ்சேஞ் பிளான் உள்ளது, இது ப்ராடக்ட் வேரியன்ட்மற்றும் வர்த்தகம் செய்யப்படும் தரத்தைப் பொறுத்து ரூ.56,500 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. நீங்கள் iPhone 15-ன் பயனுள்ள விலையை அதன் அசல் விலையில் இருந்து கிட்டத்தட்ட பாதியாக குறைக்கலாம். கூடுதலாக, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் iPhone 15-ஐ வாங்கும்போது சில கூடுதல் வங்கி தள்ளுபடிகளையும் பெறலாம். வங்கிச் சலுகைகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
iPhone 15 மொபைலின் அம்சங்கள்: iPhone 15 மொபைலானது 2556 x 1179 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 2,000 nits பீக் பிரைட்னஸுடன் கூடிய 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகத்தை வழங்கும் A16 பயோனிக் சிப்செட்டுடன் வருகிறது. இந்த மொபைலின் முன்பக்கத்தில், 48-எம்பி பிரைமரி கேமரா மற்றும் 12எம்பி அல்ட்ரா வைட் லென்ஸை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. தெளிவான செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, இதில் 12 எம்பி ஃப்ரன்ட் கேமரா உள்ளது.
ஐபோன் 15-ஆனது செராமிக் ஷீல்டு கண்ணாடியுடன் கூடிய பிரீமியம் டிசைனை கொண்டுள்ளது. இது மட்டுமின்றி, MacBook AIR Apple M2 போன்ற பிற ஆப்பிள் தயாரிப்புகளையும் நீங்கள் சலுகை விலையில் வாங்கலாம், முதலில் ரூ. 99,900க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இது தற்போது ரூ.72,990 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
December 31, 2024 7:02 PM IST