Last Updated:

Flower Price: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களுக்கான தேவை உயர்ந்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது.

X

பொங்கல்

பொங்கல் பண்டிகை எதிரொலி… கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை.. மல்லிப்பூ எவ்வளவு தெரியுமா..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளது, இதனால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

மேலும், மல்லிகைப்பூ சீசன் முடிந்துவிட்டதால் மல்லிகைப்பூ வரத்து குறைந்து காணப்படுகிறது. அதனால் மல்லிகைப்பூவின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசைநல்லூர், ஆரக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, சேவக்குளம், மணியாச்சி போன்ற சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

மேலும், பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ 2500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது.

இதையும் படிங்க: Pongal Sale: பரபரக்கும் பொங்கல் வியாபாரம்… ஒரு கட்டு கரும்பு எவ்வளவு தெரியுமா…

பிச்சிப்பூ கிலோ 2500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. சென்ட் பூ கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பன்னீர் ரோஜா கிலோ 200 ரூபாய், பட்டன் ரோஜா கிலோ 200 ரூபாய், செவ்வந்தி பூ கிலோ 300 ரூபாய்க்கும், மேலும் கனகாம்பரம் கிலோ 2400 ரூபாய் வரை விற்பனையாகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link