கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தில் போறிங்களா… அப்போ இதை செய்யாதீங்க…

தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.1000க்கும், பிச்சி ரூ.450க்கும், சம்பங்கி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.1100க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1400க்கும், அரளிப்பூ கிலோ ரூ.330க்கும், வாடாமல்லி கிலோ ரூ.120க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.60க்கும், சம்பங்கி கிலோ ரூ.450க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800க்கும், ரோஸ் கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.

மேலும், ஸ்டெம்ப் ரோஸ் ஒரு கட்டு ரூ.400க்கும், துளசி கிலோ ரூ.50க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.20க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.250க்கும், செவ்வந்தி கிலோ ரூ.200க்கும் விற்கப்படுகிறது.

இதையும் படிங்க: One Stop Centre-ல் வேலைவாய்ப்பு … எந்த தேர்வும் இல்லை…. உடனே அப்ளை பண்ணுங்க…

இதுகுறித்து தோவாளை மலர் சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், “பொதுவாகவே தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பூக்களின் விலை சற்று உயர்வது வழக்கம். தற்போது பொங்கல் பண்டிகை மற்றும் கடைசி வெள்ளிக்கிழமை காரணமாகப் பூக்கள் தேவை உயர்ந்துள்ளது.

பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் தற்போது பனிக்காலம் என்பதால் பல இடங்களில் பூக்களைச் சரிவரப் பறிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link