Last Updated:
Galaxy S25 Ultra மொபைலின் அறிமுகத்தை தொடர்ந்து, நிறுவனத்தின் முந்தைய மாடலான Galaxy S24 Ultra-விற்கு ஆன்லைனில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது Galaxy S25 சீரிஸை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த சீரிஸில் Galaxy S25, Galaxy S25+ மற்றும் Galaxy S25 Ultra ஆகிய மூன்று மாடல்கள் உள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள நிறுவனத்தின் Galaxy S24 Ultra-வை விட, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Galaxy S25 Ultra பல அப்கிரேட்ஸ்களைப் பெற்றுள்ளது.
Galaxy S25 Ultra மொபைலின் அறிமுகத்தை தொடர்ந்து, நிறுவனத்தின் முந்தைய மாடலான Galaxy S24 Ultra-விற்கு ஆன்லைனில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆம், சாம்சங் கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா எந்த விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளும் இல்லாமல் அமேசானில் மிகப் பெரிய தள்ளுபடி விலையில் தற்போது கிடைக்கிறது. தற்போது Galaxy S24 Ultra மொபைலின்12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலை இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Galaxy S24 Ultra-விற்கான ஆன்லைன் ஆஃபர் எவ்வாறு செயல்படுகிறது?
Galaxy S24 Ultra-வை பொறுத்தவரை தற்போது மிகவும் சிறப்பான தள்ளுபடி விலையான ரூ.97,799-க்கு கிடைக்கும். நீங்கள் இந்த மொபைலை வாங்க விரும்பினால் உங்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட் இருந்தால், கூடுதலாக 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் ஆஃபருடன் சேர்த்து மேற்கண்ட தள்ளுபடி விலையில் வாங்கலாம். தவிர உங்களது பழைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் விலையை மேலும் ரூ.29,000 வரை குறைக்கலாம். ஆனால், உங்கள் பழைய மொபைலின் கண்டிஷன் மற்றும் மார்க்கெட் வேல்யூ உள்ளிட்டவை இறுதி எக்ஸ்சேஞ்ச் வேல்யூவை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை சரிபார்க்க நீங்கள் அமேசானுக்குச் சென்று, நீங்கள் விரும்பும் Galaxy S24 Ultra வேரியன்ட்டை தேர்ந்தெடுத்து, உங்கள் பழைய மொபைல் குறித்த தகவலை உள்ளிடவும். உங்கள் எக்ஸ்சேஞ்ச் டிவைஸ் அதிகபட்ச மதிப்புக்கு தகுதியானதாக இருந்தால், பிரீமியம் மொபைலானது உங்களுக்கு ஒரு சிறந்த டீல் விலையில் கிடைக்கும்.
தள்ளுபடி விலையில் Galaxy S24 Ultra: வாங்குவது மதிப்புள்ளதா?
கேலக்ஸி S24 அல்ட்ராவை வாங்குவது என்பது கேஷ்பேக் சலுகைகள் அல்லது மொபைல் எக்ஸ்சேஞ்ச் என எதுவும் இல்லாவிட்டாலும், ஒரு புத்திசாலித்தனமான பர்ச்சேஸ் ஆகும். இதன் ஒரிஜினல் விலை ரூ.1,29,999ஆக இருந்த நிலையில், இந்த மொபைலுக்கு தற்போது ரூ.36,000 வரை கவர்ச்சிகரமான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க: iQOO Neo 10R 5ஜி மொபைல்…. இந்தியாவில் எப்போது அறிமுகமாகிறது தெரியுமா…?
இந்த மொபைலின் டிஸ்ப்ளேவானது ஆன்டி-ரிஃபளக்ட்டிவ் பேனலைக் கொண்டுள்ளது. மேலும், இது நம்பகமான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது 12GB ரேமுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் தனித்துவமான அம்சம் அதன் 200MP கேமரா ஆகும். மேலும், இந்த மொபைலுக்கு 7 ஆண்டு OS அப்கிரேட்ஸ், 7 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்ஸ் வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இது போன்ற அம்சங்கள் மற்றும் ஆன்லைனில் தற்போது இதற்கு கிடைக்கும் ஆஃபரை பார்க்கும்போது, S24 அல்ட்ரா தற்போது கூட வாங்க கிடைக்கும் ஒரு நல்ல டீல் ஆகும்.
January 27, 2025 1:05 PM IST