Last Updated:
Game Changer |இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ இருக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஷங்கர் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து அதில் நடித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிரமிப்புடன் பேசியுள்ளார்.
ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ இருக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஷங்கர் என்றால் மிகவும் பிடிக்கும்.
இதையும் வாசிக்க: Hansika | குடும்ப வன்முறை…தாக்குதல் – ஹன்சிகா மீது வழக்குப் பதிவு… நடந்து என்ன?
அண்மையில் ‘ஜருகண்டி’ பாடலின் வீடியோவை பார்த்தேன். ரசிகர்கள் கொடுக்கும் காசு அப்பாடலுக்கே சரியாகி போய்விடும். அப்பாடலில் ராம்சரணை கொண்டாடுவார்கள். மக்கள் கொடுக்கும் பணத்துக்கு அப்பாடலைத் தாண்டி மற்றவை அனைத்துமே போனஸ் தான்” என்று தெரிவித்துள்ளார்.
January 08, 2025 9:58 AM IST