Last Updated:

Game Changer | 2018-ல் வெளியான ‘2.0’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியானது ‘இந்தியன் 2’. ஆனால் படத்தின் பலவீனமான திரைக்கதையாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தாலும் எதிர்மறை விமர்சனத்தை எதிர்கொண்டது.

News18

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வரும் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

2018-ல் வெளியான ‘2.0’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியானது ‘இந்தியன் 2’. ஆனால் படத்தின் பலவீனமான திரைக்கதையாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தாலும் எதிர்மறை விமர்சனத்தை எதிர்கொண்டது. 2018-ல் வெளியான ‘2.0’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியானது ‘இந்தியன் 2’. ஆனால் படத்தின் பலவீனமான திரைக்கதையாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தாலும் எதிர்மறை விமர்சனத்தை எதிர்கொண்டது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இந்தப் படத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை (ஜனவரி 2-ம் தேதி) மாலை 5.04-க்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link