Last Updated:

“கேம் சேஞ்சர் படத்தை இன்னும் சிறப்பாக இயக்கியிருக்கலாம். படத்தின் மொத்த நீளம் 5 மணி நேரம் வந்தது” என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

News18

“கேம் சேஞ்சர் படத்தை இன்னும் சிறப்பாக இயக்கியிருக்கலாம். படத்தின் மொத்த நீளம் 5 மணி நேரம் வந்தது” என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் ஷங்கர் அளித்த பேட்டியில், “எல்லா இயக்குநரை போலவும் எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. எவ்வளவு செய்தாலும் ஒரு படத்தில் முழு திருப்தி கிடைக்காது.

இதையும் வாசிக்க: Pongal | நயன்தாரா முதல் கீர்த்தி சுரேஷ் வரை – திரையுலகின் ‘பொங்கல்’ கொண்டாட்டங்கள் – ஆல்பம்

‘கேம் சேஞ்சர்’ படத்தை இன்னும் சிறப்பாக இயக்கியிருக்கலாம் என எண்ணுகிறேன். நிறைய நல்ல காட்சிகள் ட்ரீம் செய்யும்போது விடுபட்டுவிட்டது. நான் மொத்த படம் 5 மணிநேரம் வந்தது. சிலை செதுக்குவது போல தானே சினிமாவும்” என்றார்.

’கேம் சேஞ்சர்’ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.400 கோடியைத் தாண்டும் என எஸ்.ஜே.சூர்யா அண்மையில் தெரிவித்திருந்தார். படம் முதல் நாளில் ரூ.186 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. மொத்தமாக வசூல் ரூ.250 கோடியை நெருங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.



Source link