நீங்கள் மொபைல் கேமிங்கில் மிகுந்த ஆர்வம் உள்ளவரா? புதிதாக சிறந்த கேமிங் மொபைல் வாங்க வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா.? உங்கள் பட்ஜெட் ரூ.30,000 என்றால் இந்த பதிவில் இந்த பட்ஜெட்டிற்குள் கிடைக்க கூடிய சில சிறந்த கேமிங் ஃபோன் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

நடப்பாண்டில் ரூ.30,000 விலைக்கு கீழ் பல மிட்-ரேஞ்ச் மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்திறனை வழங்குகின்றன. மேலும் பட்ஜெட் விலையில் ஹை-என்ட் கேமிங் எக்ஸ்பீரீயன்ஸை யூஸர்களுக்கு வழங்குகின்றன.

விளம்பரம்
நீங்கள் ஏன் தினமும் ஏலக்காய் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான 8 காரணங்கள்.!


நீங்கள் ஏன் தினமும் ஏலக்காய் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான 8 காரணங்கள்.!

BGMI, Genshin Impact, Mobile Legends, Bang Bang, Zenless Zone Zero மற்றும் பல சிறந்த கேமிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் சில சிறந்த ஸ்மார்ட் ஃபோன்கள் இங்கே:

போகோ எஃப்6 (POCO F6) – ரூ. 24,999

இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டை கொண்டுள்ளது. இந்த மொபைல் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய ஒரு பெரிய 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான HyperOS-ல் இயங்குகிறது மற்றும் 12GB ரேம் மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த மொபைலின் பின்புறம் 50MP பிரைமரி கேமரா மற்றும் 8MPஅல்ட்ரா-வைட் ஷூட்டர் உள்ளது. இதை நீங்கள் ஃப்ளிப்கார்ட்டில் ரூ.24,999-க்கு வாங்கலாம்.

விளம்பரம்

ஒன்பிளஸ் நார்ட் 4 (OnePlus Nord 4) – ரூ 29,999

இந்த மொபைல் குவால்காம் நிறுவனத்தின் Snapdragon 7+ Gen 3 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது. எக்ஸ்ட்ரீம்+ ஃபிரேம் ரேட் செட்டிங்ஸ்களுடன் அல்ட்ரா எச்டிஆர் கிராபிக்ஸில் இந்த ஸ்மார்ட் போன் BGMI-ஐ எளிதாகக் கையாள யூஸர்களுக்கு உதவுகிறது.

எடை இழப்புக்கு எலுமிச்சை நீரை உட்கொள்ளும் போது பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை.!


எடை இழப்புக்கு எலுமிச்சை நீரை உட்கொள்ளும் போது பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை.!

இந்த மொபைலின் ஆரம்ப விலை ரூ 29,999. ஃபோனில் 1240×2772 பிக்சல் (FHD+) ரெசல்யூஷன் கொண்ட 6.74-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளது. இதன் பேட்டரி கெப்பாசிட்டி 5500mAh ஆகும். Android 14-ல் இயங்கும் இந்த மொபைல் 50-MP பிரைமரி கேமரா, 8-MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் செல்ஃபிக்களுக்காக 16MP ஃப்ரன்ட் கேமரா கொண்டுள்ளது.

விளம்பரம்

ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) – ரூ 26,000

ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 சிப்செட் கொண்ட இந்த மொபைலில் 6.78-இன்ச், 120Hz AMOLED ஸ்கிரீன் உள்ளது. நேரடி சூரிய ஒளியில் கூட இந்த மொபைலின் டிஸ்ப்ளே பிரகாசமாக இருக்கும், எளிதாக பார்க்க முடியும். இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0-ல் இயங்குகிறது. இதில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் ஷூட்டருடன் டூயல்ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Qualcomm இன் சமீபத்திய 7 சீரிஸ் சிப்செட் இந்த மொபைலின் செயல்திறனுக்கு பெரிதும் உதவுகிறது. இந்த மொபைலை 26,000 ரூபாய்க்கு வாங்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) – ரூ 27,999

மோட்டோரோலா எட்ஜ் 50 சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறந்த கேமிங் ஃபோன் ஆகும். இதில் Qualcomm Snapdragon 7 Gen 1 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் POLED ஸ்கிரீனை கொண்டுள்ளது. பின்புறத்தில் 50MP , 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 13MP அல்ட்ரா-வைட் ஷூட்டர் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

விளம்பரம்

அதே நேரம் முன்பக்கம் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. இது 15W வயர்லெஸ் மற்றும் 68W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைலை பிளிப்கார்ட்டில் ரூ.27,999-க்கு வாங்கலாம்.

ப்ளூபெர்ரிகள் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!


ப்ளூபெர்ரிகள் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ (Samsung Galaxy S23 FE) :

Exynos 2200 சிப்செட் கொண்ட இந்த மொபைலில் 6.4 இன்ச் 120Hz AMOLED ஸ்கிரீன் உள்ளது. இது Galaxy AI அம்சங்களுடன் 50MP டிரிபிள் கேமரா செட்டப்புடன் வருகிறது மற்றும் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த மொபைலை பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.30,000-க்கும் குறைவான் விலையில் வாங்கலாம்.

விளம்பரம்

.



Source link