Last Updated:

Garlic Price| பூண்டின் விலை சற்று குறைந்த நிலையில் ஆர்வமாக வாங்கி செல்லும் பொதுமக்கள்.

X

பூண்டு

பூண்டு விலை குறைவு – ஆர்வமாக வாங்கி செல்லும் பொதுமக்கள் 

தமிழகத்தில் காய்கறி சந்தையில் விற்கப்படும் பூண்டு கடந்த வாரத்தை விட இந்த வாரம் 100 ரூபாய் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

மத்திய பிரதேசம், இமாச்சல், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் அதிகளவு பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தின் சேலம், சென்னை உள்பட பல்வேறு மாவட்ட மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படுகிறது.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பூண்டு மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. உணவிற்கு சுவையும், மணமும் சேர்க்க கூடிய பூண்டின் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ பூண்டின் விலை குறைந்தபட்சம் ரூ.260 முதல் அதிகபட்சமாக ரூ.360 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுவே சில்லரை விற்பனைக் கடைகளில் ரூ.360 முதல் ரூ.380 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் வாசிக்க: ரயில் பயணிகளே இதை கொஞ்சம் நோட் பண்ணுங்க – பொங்கலுக்கு தாம்பரம் டூ ராமநாதபுரம் சிறப்பு ரயில் இயக்கம்…

கடந்த மாதம் இமாச்சல் பூண்டு சில்லரை விலையில் கிலோ, 400க்கு விற்றது, இந்த மாதம் தரத்துக்கு ஏற்ப, 100 வரை விலை குறைந்து, 300 முதல், 340 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த விலை குறைவுக்கு காரணம் மற்ற மாநிலங்களில் பெய்த மழை தான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பூண்டின் விலை சற்று குறைந்த நிலையில் பொதுமக்கள் பூண்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link