சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.
அதன்படி, இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட கேஸ் சிலிண்டர் விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.61.50 விலை ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க:
புதுவை, விழுப்புரத்தில் பெருமழை..! கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்..
குறிப்பாக சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,964.50 ஆக இருந்த நிலையில், இன்று முதல் ரூ.61.50 பைசா உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் ரூ.2026-க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சென்ற மாதமும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.61.50 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
.