20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்ற வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Also Read:
“குற்றம் நிரூபணம் ஆகும் வரை நாங்கள் நிரபராதிகள்..” – ஊழல் புகாரில் அதானி குழுமம் விளக்கம்
நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் சூரிய மின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர அதானி முன்வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைகேடாக பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Also Read | தமிழ்நாடு பாஜக மீது தேசிய தலைமை அதிருப்தி? – விரைவில் மீண்டும் அண்ணாமலை
மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு முதல், இந்திய அதிகாரிகளை அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கவுதம் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
.