– நவம்பர் 30 முதல் அட்டவணைக்கு அமைய இடம்பெறும்

தற்போது நடைபெற்று வரும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நவம்பர் 27, 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பாடங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று (26) பிற்பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, தெரிவித்தார்.

அத்துடன், நவம்பர் 30 ஆம் திகதி (சனிக்கிழமை) முதல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சைகள் நேர அட்டவணையின் படி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில், நவம்பர் 27, 28, 29 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் முறையே டிசம்பர் 21, 22, 23 ஆம் திகதிகளில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குறித்த பரீட்சை அட்டவணைக பின்னர் வெளியிடப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

GCE-AL-Temporarily-Suspended-Tamil

The post GCE A/L பரீட்சைகள் நவம்பர் 27, 28, 29 இல் இடம்பெறாது appeared first on Thinakaran.



Source link