கடந்த மாதம் தங்கம் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், டிசம்பர் மாதத்திலும், தங்கம் விலை அதே நிலையை தான் கொண்டுள்ளது. ஆனால் இன்றைய தங்கம் விலை மக்களுக்கு அதிர்ச்சியளிக்காமல், ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.

நேற்று (03.12.2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.40 அதிகரித்து, ரூ.7,130-க்கும், ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (03.12.2024) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
செயல்படாத வங்கி கணக்குகள்.. ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு.. என்ன தெரியுமா?

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.5,890-க்கும், ஒரு சவரன் ரூ.47,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையைப்போல வெள்ளி விலையிலும் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

.



Source link