Last Updated:
Gold Rate | தங்கம் ஒரு சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 75 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 525 ரூபாயாக விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 60 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 60 ஆயிரம் ரூபாயைத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
தங்கம் ஒரு சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 75 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 525 ரூபாயாக விற்பனையானது.
கடந்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இதுவரை தங்கத்தின் விலை 12 ஆயிரத்து 920 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிக்காக தங்க நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வரும் நாட்களில் தங்கம் விலை புதுப்புது உச்சம் தொடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாலும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்ததுமே தங்கம் விலை அதிரடியாக உயரக் காரணமாக கூறப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 23, 2025 7:41 AM IST
Gold Rate | தங்கம் விலை அதிரடியாக உயரக் காரணம் டிரம்பா? – அடுத்தடுத்த நாட்களில் காத்திருக்கும் அதிர்ச்சி!