Last Updated:

Honey Rose | மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மன்னூரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

News18

மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மன்னூரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை ஹனிரோஸ். ‘முதல்கனவே’, ‘சிங்கம் புலி’ போன்ற தமிழ் படங்களிலும இவர் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் 60 வயதைக் கடந்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு, 30 வயதான ஹனிரோஸ் தாயாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பெரும் புகழ் பெற்றார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் வெளியிட்ட ஒரு பதிவு விவாதத்தை ஏற்படுத்தியது. அதில் அவர், தொழிலதிபர் ஒருவர், தன்னைக் குறித்து வேண்டுமென்றே ஒரு நபர் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்தி வருவதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். அவரது பெயரை ஹனிரோஸ் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், தொழில் அதிபர் பாபி செம்மன்னூர் பொது மேடையில் வைத்து பெண்மையைக் களங்கப்படுத்தும் விதமாகவும், தொடர்ச்சியாக ஆபாசமாக விமர்சித்ததாக எர்ணாகுளம் சென்ட்ரல் போலீஸில் நடிகை ஹனி ரோஸ் புகார் அளித்திருந்தார். கடந்த ஆண்டு கோழிக்கோட்டில் நகைக்கடை திறப்புவிழாவுக்குச் சென்றபோது ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த சமயத்தில் போபி செம்மண்ணூர் தனக்கு நெக்லஸ் அணிவித்ததுடன், கையைப் பிடித்துச் சுற்றினார் எனவும் புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பான வீடியோவையும் காவல்துறையினரிடம் அவர் சமர்பித்தார். இதையடுத்து ஹனி ரோஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வயநாட்டில் வைத்து பாபி செம்மனூரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஹனி ரோஸ், “இன்று எனக்கு மிகவும் அமைதியான நாள்” என குறிப்பிட்டுள்ளார்.



Source link