சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2024 ஆண்டின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த ஆடவருக்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வென்றுள்ளார்.
குறித்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஜஸ்பிரிட் பும்ராவுடன் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மற்றும் தென் ஆபிரிக்காவின் டேன் பேட்டர்சன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியின் சுற்றுப்பயணத்தின் போது, ஜஸ்பிரிட் பும்ராவின் சிறப்பான ஆட்டத்தினூடாக குறித்த விருதை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில், ஜஸ்பிரிட் பும்ரா 14.22 என்ற சராசரி வீதத்தில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அதேநேரம், இந்தத் தொடரின் போது அவர் தமது 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டினார்.
வீசப்பட்ட பந்துகளின் அடிப்படையில் இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரிட் பும்ரா இடம்பிடித்துள்ளார்.
அத்துடன், 20க்கும் குறைவான சராசரி வீதத்துடன் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.