Last Updated:

Ilaiyaraaja | ‘அன்னக்கிளி’ படத்தின்போது எனக்கு இசை தெரியுமா என்றால் சத்தியமா தெரியாது. இப்போ வரைக்கும் எனக்கு மியூசிக் தெரியாது.

News18

“தற்போது வரை தனக்கு இசை தெரியாது” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு கமல்ஹாசன் கொடுத்த கமென்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு மரியாதை செய்யும் விதமாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்தார்.  இதில் கலந்துகொண்ட இளையராஜா, தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது தனது முதல் படத்தில் தொடங்கி தற்போது வரை தனக்கு இசை குறித்து தெரியாது என இளையராஜா குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது,  “இந்தியா முழுக்க சுத்தி பார்த்தபோதும் எனக்கு இசை தெரியாது. இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மெட்ராஸுக்கு வந்தேன். வீட்டில் இருந்த ரேடியோ பெட்டியை விற்று அம்மா ரூ.400 கொடுத்தார். ‘போதுமா பா’ என கேட்டார்.

இதையும் வாசிக்க: Cinema | யார் இந்த பிரபலம்? சாக்லேட் பாய் என புகழப்பட்ட பிரதான நடிகர்… அடையாளம் தெரியுதா?

‘நாங்கள் செலவுக்கு வைத்துக்கொள்ளுமா’ என எந்த காசையும் கொடுக்காமல் வாங்கிவிட்டு வந்தோம். அப்போ இசை தெரியுமா என்றால் தெரியாது. தன்ராஜ் மாஸ்டரிடம் சேரும்போது இசை தெரியுமா என்றால் தெரியாது. சங்கிலி முருகனிடம் சேர்ந்தபோது இசை தெரியுமா என்றால் தெரியாது.

‘அன்னக்கிளி’ படத்தின்போது இசை தெரியுமா என்றால் சத்தியமா தெரியாது. இப்போ வரைக்கும் எனக்கு மியூசிக் தெரியாது” என்றார். உடனே கமல்ஹாசன், “ஆனால் மியூசிக்குக்கு உங்களை தெரியும்” என சொல்ல அரங்கத்தில் சிரிப்பொலி எழுந்தது.





Source link