Last Updated:

“இன்றைக்குத் திட்டமிட்டு ஷூட் முடித்தால் அதுவே சாதனை தான். அந்த வகையில் அருண் மிக அருமையாகத் திட்டமிட்டு எடுத்தார்” என்றார் நடிகர் இளவரசு. 

News18

“இன்றைக்குத் திட்டமிட்டு ஷூட் முடித்தால் அதுவே சாதனை தான். அந்த வகையில் அருண் மிக அருமையாகத் திட்டமிட்டு எடுத்தார்” என்றார் நடிகர் இளவரசு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்  ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஹரிபாஸ்கர், லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு நடித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் இளவரசு, “தேனாண்டாள் பிலிம்ஸ் 100 படம் முடித்து, 101வது படமாக இதனை தயாரித்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் 100-ஐ கடப்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. இந்தக் கம்பெனியில் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. ராமநாராயணன் மிகப்பெரிய தயாரிப்பாளராகப் புகழ் பெற்றவர். விஜயகாந்த்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்.

இதையும் வாசிக்க: Dil Raju | அதிரடியாக புகுந்த 55 அதிகாரிகள்…விஜய் பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு..பின்னணி என்ன?

அப்படியான கம்பெனியில் பி.வாசு பள்ளியிலிருந்து வந்த அருண்  இப்படத்தை இயக்கியுள்ளார். அவர் எனக்கு அப்பா பாத்திரம் எனச் சொன்னபோது, எனக்கு எல்லாம் அப்பாவாகத்தான் வருகிறது. இதைச் செய்ய வேண்டுமா? எனத் தயங்கினேன். ஆனால் அருண் கதையையே சின்னதாகத் தான் சொன்னார். அவரிடம் இருந்த தெளிவு எனக்குப் பிடித்திருந்தது. இன்றைக்குத் திட்டமிட்டு ஷூட் முடித்தால் அதுவே சாதனை தான். அந்த வகையில் அருண் மிக அருமையாகத் திட்டமிட்டு எடுத்தார்.

இந்தப் படத்தில் ஹரிபாஸ்கர் நாயகன். அவர் ஒரு யூடியூபர். ஆனால், படத்தில் நடிக்க கேமராவை அணுகி நடிப்பதில், திறமை வேண்டும். முதல் நாளிலேயே ஹரிபாஸ்கர் வெகு இயல்பாக நடித்தார். களவாணியில் விமலிடம் நான் பார்த்த திறமையை ஹரிபாஸ்கரிடம் பார்த்தேன். அவருக்கு வாழ்த்துகள். தமிழ் பேசத்தெரிந்த மேற்கத்திய அழகி லாஸ்லியா. நல்ல கதாபாத்திரம். நன்றாக நடித்துள்ளார். வாழ்த்துக்கள்” என்றார்.



Source link