சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடன் ஒத்துழைப்பு திட்டத்தில் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான, அமாரி கொழும்பு ஹோட்டல் திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டபோதே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பிலுள்ள தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாகும். வினில் மெனிக் நிறுவனத்தின் உரிமையாளர் டபிள்யூ.வினில் அந்த நிறுவனத்தின் தலைவராவார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல முக்கிய அதிதிகள் இந்த ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post IMF உடன் கடன் ஒத்துழைப்பு திட்டத்தில் அரசின் செயற்பாடு appeared first on Thinakaran.



Source link