Last Updated:

Income Tax: வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

News18

ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் புதிய வகையான வருமான வரித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கும், 3 முதல் 7 லட்சம் ரூபாய்க்கு 5 சதவிகிதமும், 7 முதல் 10 லட்சம் ரூபாய்க்கு 10 விழுக்காடும் வரி வசூலிக்கப்படுகிறது. அதே போன்று, 10 முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 15 சதவிகிதமும், 12 முதல் 15 லட்சம் ரூபாய்க்கு 20 விழுக்காடும், 15 லட்சத்திற்கும் மேல் 30 சதவிகிதமும் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி வசூல் முறை அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய முறையில் வருமான வரி செலுத்தவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

Also Read | இந்தியாவை மாற்றிய ஒரு போன் கால்.. நம்பாத மன்மோகன் சிங்.. நடந்தது என்ன?

அதில், புதிய வரி வசூல் முறையில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

வருமான வரி குறையும் பட்சத்தில், பல கோடி பேர் பயன்பெறுவார்கள் என கருதப்படுகிறது.



Source link