சீனாவின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
அதன்படி, சீனாவின் ஸ்டேட் கவுன்சில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், பிரசவத்திற்கான மானியங்கள் மற்றும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டி உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான ஆதரவான சூழலை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
State Council’s 13-point plan திட்டமானது, குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆதரவை மேம்படுத்துதல் மற்றும் பிரசவ உதவி திட்டங்களை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு சமூக சூழலை மேம்படுத்துவதையும், பிரசவ மானிய முறையை மேம்படுத்துவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Also Read:
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை என்ன… எப்படி நடக்கிறது? – ஓர் பார்வை!
மேலும், திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய ஒரு புதிய கலாச்சார அணுகுமுறையை இந்த கவுன்சில் பரிந்துரைக்கிறது. சரியான வயதில் திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், பெற்றோரின் பொறுப்புகளை பகிர்ந்து கொள்கிறது. சிறந்த மகப்பேறு நன்மைகள், நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு, மானியங்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் ஆகியவையும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு வரவு செலவுத் தொகையை ஒதுக்கவும், இந்த சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கவும் உள்ளாட்சி அமைப்புகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. சீனாவின் மக்கள் தொகை தற்போது 1.4 பில்லியனாக உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது.
இதை தொடர்ந்து பிறப்பு விகிதத்தை உயர்த்த சீனா திட்டமிட்டு வருகிறது. கணிசமான எண்ணிக்கையிலான வயதான குடிமக்களை சீனா எதிர்கொள்வதால், நாட்டின் மக்கள் தொகை விவரம், இந்தியாவின் இளம் மக்கள் தொகையுடன் முரண்படுகிறது. 2023ஆம் ஆண்டில், சீனாவில் சுமார் 300 மில்லியன் மக்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 21.1% பேர் ஆகும். இதுவே முந்தைய ஆண்டு 280 மில்லியனாக இருந்தது.
.