Last Updated:

தன்னை ஸ்லெட்ஜ் செய்தால், தனது பவுலிங் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு தான் யார் என்பதை ஸ்டார்க் காட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

News18

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் பெர்தில் உள்ள மைதானத்தில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி தொடங்கியது.

முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், அந்த போட்டியில் கவனத்தை ஈர்த்தது இளம் வீரரான ஜெய்ஸ்வால் தான். முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் மட்டும் 161 ரன்களை எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்சில் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவரில், “பந்து மெதுவாக வருகிறது” என கூறிய ஜெய்ஸ்வால் அதிகம் ட்ரெண்டானார். தற்போதைய பந்துவீச்சாளர்களில், உலகதரத்தில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஸ்ராட்கை, ஆஸ்திரேலியாவில் மெதுவாக பந்துவீசுகிறார் என ஜெய்ஸ்வால் சொன்னது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இந்த சொல் ஸ்டார்க்கை மிகவும் சீண்டியதாகவே இருந்தது.

இதையும் படிக்க: 3ஆவது நாளில் ஆறுதலாக அமைந்த இந்திய பவுலிங்..! 445 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அவுட்

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜெய்ஸ்வாலை முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கினார் ஸ்டார்க். இதையடுத்து, தற்போதைய 3ஆவது டெஸ்ட் போட்டியிலும், இரண்டாவது பந்திலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை எடுத்துள்ளார் ஸ்டார்க்.

தன்னை ஸ்லெட்ஜ் செய்தால், தனது பவுலிங் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு தான் யார் என்பதை ஸ்டார்க் காட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி தற்போது வரை 7 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.



Source link