Last Updated:

போட்டியின் 10ஆவது ஓவரின் முடிவில் மைதானத்தில் நடந்து சென்ற கோலி, சாம் கான்ஸ்டாஸை தோளில் மோதினார்.

News18

ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாசுடன் மோதலில் ஈடுபட்டதால், அடுத்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4 ஆவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அறிமுக வீரராக களமிறங்கி, இந்திய நட்சத்திர வீரரான பும்ரா வீசும் ஆக்ரோஷமான பந்துகளை அசால்ட்டாக கையாண்டார்.

போட்டியின் 10ஆவது ஓவரின் முடிவில் மைதானத்தில் நடந்து சென்ற கோலி, சாம் கான்ஸ்டாஸை தோளில் மோதினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. விராட் கோலியின் இந்த மோதலை கள நடுவர் விலக்கி விட்டார்.

ஐசிசி விதிப்படி கிரிக்கெட் வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படும்போது, ஒருவரை ஒருவர் தொட்டாலே அது இரண்டாம் நிலை விதிமீறலாகும். இவ்வாறு மோதிக்கொள்ளும் வகையிலான விதிமீறலில் ஈடுபட்டால் அடுத்த ஒரு போட்டியில் தடை விதிக்கவும் விதிகளில் இடம் உள்ளது. இதன்படி நட்சத்திர வீரர் விராட் கோலி, சிட்னியில் நடக்க உள்ள அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதிக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Source link