Last Updated:

பும்ரா மைதானத்தில் இல்லாத நேரத்தில் விராட் கோலி இந்திய அணியை வழிநடத்தினார்.

பும்ரா

சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் கேப்டனாக உள்ள அவர், இந்திய அணி பந்துவீச்சு செய்த போது மைதானத்திலிருந்து வெளியேறினார்.

போட்டியின் போது விராட் கோலியிடம் பேசிவிட்டு, அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு காயம் ஏற்பட்டதா என்று ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். மேலும் அவர் மைதானத்தில் இல்லாத நேரத்தில் விராட் கோலி இந்திய அணியை வழிநடத்தினார்.

இதையும் படிக்க: வம்பிழுத்த சாம் கோன்ஸ்டாஸ்.. சுத்து போட்டு கெத்து காட்டிய பும்ரா அன்ட் கோ.. கடைசி ஓவர் த்ரில்!

இந்த நிலையில் பும்ராவுக்கு என்ன ஆனது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. உணவு இடைவெளிக்குப் பிறகு ஒரு ஓவர் வீசிய அவருக்கு திடீரென வலி ஏற்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் ஸ்கேன் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மைதானத்தில் இல்லாத நிலை ஏற்பட்டது.

அந்த வலி தற்போது சரியானதால், இந்திய அணியின் 2ஆவது இன்னிங்சில் பும்ரா பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் மட்டும் 32 விக்கெட்டுகளை எடுத்திருந்த அவர், இந்திய அணியின் பந்துவீச்சுக்குத் தூணாக விளங்கினார்.





Source link