இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று தொடங்கும் 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கிடும் என கணிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வங்கதேச அணி, 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.

விளம்பரம்

ஆனால், கான்பூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Also Read |
Ind vs Ban : கான்பூர் டெஸ்டில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்..? ப்ளயேிங் லெவன் என்ன?

குறிப்பாக, ஆட்டம் தொடங்கும் இன்றைய தினம், மைதானத்தில் மழை பெய்வதற்கு 93 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஒருவேளை, மழை நீடித்து, 2-ஆவது டெஸ்ட் போட்டி கைவிடப்படும் பட்சத்தில், இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.

விளம்பரம்

.



Source link