இந்திய இளம் வீரர் மயங்க் யாதவ் சாதனையுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று குவாலியரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 127 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடி 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த டெல்லியைச் சேர்ந்த 22 வயதான மயங்க் யாதவ், இந்த போட்டியில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.
இதையும் படிக்க:
12 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த இந்திய அணி… வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20-யில் அதிரடி வெற்றி
இந்த போட்டியில் பவுலிங் செய்த அவர், தனது முதல் ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டன் ஓவரை வீசி சாதனை படைத்தார். தொடர்ந்து, வங்கதேச வீரர் மகமுத்துல்லா விக்கெட்டையும் தனது இரண்டாவது ஓவரில் வீழ்த்தினார். 4 ஓவரை வீசிய மயங்க் யாதவ், 21 ரன்களை விட்டுக்கொடுத்து, 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதற்கு முன்னதாக, இந்திய வீரர்கள் அஜித் அகர்கர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தங்களது முதல் டி20 போட்டியின் முதல் ஓவரை மெய்டன்களாக வீசி சாதனை படைத்திருந்தனர்.
.