Last Updated:
IND vs ENG | 2023ல் நடந்த ஆடவர் உலகக் கோப்பை போட்டியின் போது முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட முகமது ஷமி சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்புகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரும் 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் டி20 போட்டி தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள 15 வீரர்கள் அடங்கிய பட்டியலில், அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
2023ல் நடந்த ஆடவர் உலகக் கோப்பை போட்டியின் போது முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட முகமது ஷமி சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். தமிழக சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கும் இந்த அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருப்பதால் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் அக்சர் படேலுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளதால், பிளேயிங் லெவனில் தவிர்க்க முடியாதவராக மாறி உள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 12, 2025 8:19 AM IST