பெங்களூரு டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களில் சுருண்டது.

3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் என்ற நிலையில், 3ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணியில், ரச்சின் ரவீந்திரா சதம் விளாசினார். எட்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டிம் சவுத்தி, 65 ரன்கள் எடுத்தார். இதனால், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது.

விளம்பரம்
க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே… நடிகை இவானாவின் க்யூட் இன்ஸ்டா க்ளிக்ஸ்!


க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே… நடிகை இவானாவின் க்யூட் இன்ஸ்டா க்ளிக்ஸ்!

இதையடுத்து, 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜெய்ஸ்வால் 35 ரன்களில் பெவிலியன் திரும்பியபோதிலும், கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து விராட் கோலியும், சர்ஃபராஸ் கானும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கோலி 70 ரன்களில் 3ஆம் நாளின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 3-ஆம் நாள் முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.

விளம்பரம்

இதையும் படிக்க:
1 பந்தில் 17 ரன்கள்.. இதுவரை யாராலும் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் உலக சாதனை!

இதையடுத்து இன்று காலை போட்டி தொடங்கியவுடன், ரிஷப் பண்ட் தனது வழக்கமான அதிரடிபாணியில் அரைசதம் அடிக்க, சர்ஃபராஸ் கானும் சதம் விளாசினார். 71 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களை எடுத்திருக்கும் நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

.



Source link