மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 147 ரன்களை சேஸிங் செய்த இந்திய அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வலுவான பேட்டிங் லைன் அப் இருந்தும் இந்திய அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேட்ச்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களும், இந்தியா 263 ரன்களும் எடுத்திருந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 174 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

விளம்பரம்

டார்கெட் மிக குறைவானது என்பதால் இதனை இந்திய அணி எளிதாக எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய  அணியில் ரிஷப் பந்த்தை தவிர்த்து மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் பொறுப்பற்ற முறையில் விளையாடி ஆட்டமிழந்தனர்.

வழக்கம்போல ஒருநாள் போட்டிகள் போன்று விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 11 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

சுப்மன் கில்லும், விராட் கோலியும் தங்கள் பங்கிற்கு தலா 1 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினர். சர்ப்ராஸ் கானும் 1 ரன்னில் வெளியேறியதால், 7.1 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விளம்பரம்

அப்போதே நியூசிலாந்து அணி வெற்றிபெறப் போவது ஏறக்குறைய உறுதியாகி இருந்தது. இருப்பினும், ரிஷப் பந்த் தனது அதிரடியான பேட்டிங்கால் தொடர்ந்து நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டு இருந்தார்.

ஒவ்வொரு ஓவரிலும் ரிஷப் பந்த் பவுண்டரிகளை பறக்க விட ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மிக அதிக நெருக்கடியான தருணத்தில் இயல்பாக விளையாடிய ரிஷப் பந்த் 57 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

விளம்பரம்

ரிஷப் பந்த் ஆட்டமிழந்தபோது அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்தது. அப்போது வெற்றிக்கு கூடுதலாக 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் வெற்றி இரு தரப்புக்கும் கிடைக்கலாம் என்ற சூழல் காணப்பட்டது.

நம்பிக்கை அளிக்கும் வகையில் ரவிச்சந்திரன் அஷ்வினும், வாஷிங்டன் சுந்தரும் சிங்கிள், சிங்கிளாக ரன்களை சேர்த்தனர்.

இதையும் படிங்க – வான்கடேவில் வாஷ் அவுட்டான இந்தியா… மும்பை டெஸ்டிலும் நியூசிலாந்து அபார வெற்றி

28.4 ஓவரில் அணி  121 ரன்கள் எடுத்திருந்த நிலையில்,அஷ்வின் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஆகாஷ் தீப் வெளியேற, இந்தியா 9 விக்கெட்டுகளுக்கு 121 ரன்கள் என்ற நிலைக்கு சென்றது. அடுத்த 2 ஆவது பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்க வெற்றியை உறுதி செய்தது நியூசிலாந்து அணி.

விளம்பரம்

மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம், சரியான பார்ட்னர்ஷிப் இல்லாதது, எந்த இடத்திலும் இந்தியாவுக்கு பிடி கொடுக்காத நியூசிலாந்து அணியின் மிக துல்லியமான பர்ஃபார்மென்ஸ் ஆகியவை இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்துள்ளன.

.



Source link