தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும், இராண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றது. இதையடுத்து 3வது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய திலக் வர்மா, 56 பந்துகளில் 7 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தென்னாப்பிரிக்கா விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் மார்கோ ஜான்சன் போட்டியின் இறுதியில் அதிரடி காட்டி வெற்றியை திசைதிருப்ப முயன்றார். 17 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் உடன் 54 ரன்கள் விளாசி அவுட்டானார்.
Also Read :
இந்தியாவால் ரூ.500 கோடி இழப்பை சந்திக்கப் போகும் பாகிஸ்தான்? – பின்னணி காரணம் என்ன?
தென்னாப்பிரிக்கா இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி, நாளை நடைபெறுகிறது.
.