Last Updated:
முதலில் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதல் அதிரடியாக ஆடியது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியது.
இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையும் படிக்க: நான் தோற்று விட்டேன்… கதறி அழுத விராட் கோலி – அனுஷ்கா ஷார்மா பகிர்ந்த சோகம்
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதல் அதிரடியாக ஆடியது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார். ஹர்லீன் தியோல் (44), பிரதிகா ராவல் (40) ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு, 314 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி ஆல் அவுட்டாகி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் ரேணுகா சிங், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
December 23, 2024 7:55 AM IST