சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனான ஜீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 4720mAh பேட்டரி, டைமென்சிட்டி 8020 சிப்செட், GoPro மோட் மற்றும் 512GB வரையிலான ஆன் போர்டு ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை பற்றி விரிவாக பார்ப்போம்.
இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் விவரக் குறிப்புகள்:
இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனானது 1080 x 2640 பிக்சல், 1400 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட 6.9 இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இதன் 2வது டிஸ்பிளேவில்1056 x 1066 பிக்சல் மற்றும் 120Hz ஸ்மார்ட்போனிலும் மீடியாடெக் டைமென்சிட்டி 8020 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இதில் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பு உள்ளது. 2 வருட OS அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனில் டூயல் ரியர் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஃபோனில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இது செல்பி மற்றும் வீடியோ கால்களுக்காக 50MP கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களும் இரண்டும் 4K வீடியோ பதிவை ஆதரிக்கின்றன. மேலும் இந்த ஃபோனில் AI Vlog மோட் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
5 வயதிற்குள்ளான குழந்தைக்கு ஆதார் எடுத்து இருக்கீங்களா..? அப்போ கட்டாயம் இத செய்யுங்க
இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஃபோனில் பெரிய 4,720mAh பேட்டரியுடன் வருகிறது. மேலும் 70W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனில் AI அசிஸ்டன்ட், கூகுள் ஜெமினி போன்ற அம்சங்கள் உள்ளன. இது தவிர, JBL ஸ்பீக்கர்கள், என்எப்சி வாலட் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் வருகின்றன. இது 7.64 மிமீ திக்நெஸ் மற்றும் 195g எடை கொண்டுள்ளது. இணைப்பிற்காக Wi-Fi, ப்ளூடூத், GPS, NFC மற்றும் USB-C போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஆன்ட்ராய்டு 14 உடன் HiOS 14.5 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
இதையும் படிக்க:
அதிரடியாக விலை குறைக்கப்பட்ட ஹானர் 200 ப்ரோ 5ஜி மொபைல்!
இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:
இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆனது ப்ளாசம் க்ளோ மற்றும் ராக் பிளாக் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை $600 (சுமார் ரூ. 50,217) ஆகும், ஒவ்வொரு நாட்டிலும் போனின் விலை வித்தியாசமாக இருக்கும். இந்தியாவில் இந்த போனின் விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
.