Last Updated:

iphone 17 series: ஐபோன் 17 சீரிஸில் அறிமுகமாகும் புதிய அம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

News18

இந்த ஆண்டு இப்போது தான் துவங்கி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் வெளியீட்டிற்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. ஆனால் டெக்னாலஜி குறித்த செய்திகள் வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸ் மாடல்களை பற்றிய யூகங்கள் மற்றும் செய்திகளால் நிரம்பியுள்ளது. இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ள iPhone SE 4 மாடலை ஆப்பிள் நிறுவனம் AI மற்றும் பிற பிரீமியம் அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தினால் இது பிரபலமான மாடலாக இருக்கும். எனினும் iPhone 17 பல்வேறு காரணங்களுக்காக மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் புது சீரிஸ் மொபைல்களை வெளியிட்டு வந்தாலும், அவற்றின் பேஸ் மாடலின் டிஸ்ப்ளே அதிக ரெஃப்ரஷ் ரேட்-ஐ கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் நடப்பாண்டில் இதில் மாற்றங்கள் இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

iPhone 17-ல் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே இருக்குமா?:

ஆம், சமீபத்தில் வெளியான புதிய அறிக்கைகள் iPhone 17 மற்றும் 17 Plus/Slim வேரியன்ட்ஸ்களை பற்றி மீண்டும் ஒருமுறை கூறி உள்ளன. LTPO OLED பேனலைக் கொண்டிருப்பது, இந்த ஐபோன் மாடல்களுக்கு ப்ரோ பதிப்புகளில் உள்ள அதே அம்சத்தை, அதிகச் செலவு இல்லாமல் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபோனில் ப்ரோ-மோஷன் (ProMotion) டிஸ்ப்ளேக்கள் ஐபோன் 13 ப்ரோ மாடல்களுடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும் இந்த டிஸ்ப்ளேக்கள் ஐபோன் 16 லைன்அப்-ல் இடம்பெறும் அனைத்து மாடல்களுக்கும் வழங்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இது நடக்கவில்லை. இருப்பினும், ஆப்பிள் 2025 ஐபோன் லைன்அப்-ல் சில பெரிய அப்கிரேட்ஸ்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே வழக்கமான மாடல்களில் ப்ரோ-மோஷன் அம்சத்தை வழங்குவது முக்கிய நடவடிக்கையாக இருக்க கூடும்.

ஆண்ட்ராய்ட் மொபைல் செக்மென்ட்டில் ஹை ரெஃப்ரஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன, மேலும் இது போன்ற ஆண்ட்ராய்ட் மொபைல்கள் தோராயமாக ரூ. 20,000-க்கு கூட கிடைக்கின்றன. இது போன்ற அம்சத்தை ஆப்பிள் இதுவரை பரவலாக அறிமுகப்படுத்தாதது பல ஆண்டுகளாக மக்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இது இறுதியாக 2025-ல் வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸில் இடம்பபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

எனினும் இந்த அப்கிரேட்ஸ் ஆப்பிள் மாடல்களின் விலையை அதிகமாக நிர்ணயிக்க வைக்க கூடும். ஆப்பிள் அடுத்தடுத்து செய்யும் அப்கிரேட்ஸ்கள் இன்னும் அதிகமான மக்களை ஐபோன் மாடல்களை நோக்கி ஈர்க்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மொத்தத்தில் ஆப்பிளின் பெரிய அப்கிரேட் நடவடிக்கைகள் ஐபோன் 17 சீரிஸில் இடம்பெறும் வழக்கமான மாடலை 2025-ஆம் ஆண்டின் ஐபோனை வாங்குபவர்களுக்கு மிகச் சிறந்த டீலாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.



Source link