நீங்கள் சக்திவாய்ந்த தொலைபேசியை வாங்க திட்டமிட்டால், நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் டிசம்பர் மாதத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன் பிராண்டுகள் அதன் சக்திவாய்ந்த போனை அறிமுகப்படுத்தப் போகின்றன. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட்டில் இயங்கும் புதிய ப்ராசசர் பொருத்தப்பட்டிருக்கும். டிசம்பர் 2024இல் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
1. iQOO 13:
சீனாவில் தொடங்கப்பட்ட iQOO 13 ஸ்மார்ட்போன் டிசம்பர் 3ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 16GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OriginOS 5 மூலம் இயங்குகிறது. iQOO ஃபோன் ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி உடன் வருகிறது. நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 மதிப்பீடு கொண்டுள்ளது.
சீன விவரக் குறிப்புகளைப் பார்க்கும்போது, iQOO 13 ஆனது 4,500 நிட்ஸ் பீக் பிரைட்நெஸ் கொண்ட 6.82-இன்ச் 2K+ 144Hz BOE Q10 LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது, 50MP சோனி IMX921 பிரைமரி சென்சார், 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 50MP 3x டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை ஆகும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP ஃபிரன்ட் கேமரா கொண்டுள்ளது.
2. விவோ X200 சீரிஸ்:
விவோ X200 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் 9400 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. விவோ X200 ஆனது 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50MP விவோ IMX882 டெலிமேக்ரோ 3x சென்சார் கேமரா கொண்டிருக்கும். விவோ X200 ப்ரோ ஆனது 50MP அல்ட்ரா-வைட் ரியர் கேமரா மற்றும் 3.7x ஆப்டிகல் ஜூம் கொண்ட 200MP சாம்சங் HP9 டெலிமேக்ரோ சென்சார் கேமரா கொண்டிருக்கும். இது தவிர இரண்டு போன்களும் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP ஃபிரன்ட் கேமரா கொண்டுள்ளது.
3. ஒன்பிளஸ் 13:
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஒப்போவின் துணை பிராண்ட்டான ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் வாட்ச் 3 அறிமுகப்படுத்தும். சீனா விவரக்குறிப்புகளின் படி, ஒன்பிளஸ் 13 ஆனது 4,500 நிட்ஸ் பீக் பிரைட்நெஸ் உடன் 6.82-இன்ச் BOE X2 2K+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஆனது அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 மதிப்பீடு கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கும். இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது, சோனி LYT 808 பிரைமரி சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP சோனி LYT600 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP சாம்சங் JN1 அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 32MP சோனி IMX612 ஃபிரன்ட் கேமரா கொண்டுள்ளது.
4. டெக்னோ ஃபான்டோம் V ஃபோல்ட் 2 மற்றும் டெக்னோ ஃபான்டோம் V ஃபிலிப் 2:
அறிக்கைகளின்படி, டெக்னோ அடுத்த மாதம் இந்தியாவில் டெக்னோ ஃபான்டோம் V ஃபோல்ட் 2 மற்றும் டெக்னோ ஃபான்டோம் V ஃபிலிப் 2 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க:
போலி ஐபோனை கண்டுபிடிப்பது இவ்வளவு ஈஸியா…? எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா…?
டெக்னோ ஃபான்டோம் V ஃபிலிப் 2 ஆனது 6.9-இன்ச் முழு HD+ LTPO AMOLED பிரைமரி டிஸ்ப்ளே மற்றும் 3.64-இன்ச் AMOLED அவுட்டர் டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெறுகிறது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 8020 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,720mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி ப்ரைமரி ஷூட்டர் மற்றும் 50எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகிய இரண்டு ரியர் கேமரா கொண்டுள்ளது மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 32MP ஷூட்டர் கொண்டுள்ளது.
மேலும், டெக்னோ ஃபான்டோம் V ஃபோல்ட் 2 ஆனது 7.85-இன்ச் LTPO AMOLED இன்னர் டிஸ்ப்ளே மற்றும் 6.42-இன்ச் LTPO AMOLED அவுட்டர் டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெறுகிறது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 9000+ ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி ஷூட்டர், 50MP 2x ஆப்டிகல் ஜூம் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகிய மூன்று ரியர் கேமரா கொண்டுள்ளது மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 32MP சென்சார் கொண்டுள்ளது.
இதையும் படிக்க:
iPhone அம்சங்களுடன் OPPO Find X8 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்….விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரம்!
5. போக்கோ F7:
போக்கோ நிறுவனம் இந்தியாவில் அதன் மற்றொரு F சீரிஸ் வரிசையை விரிவுபடுத்த தயாராகி வருகிறது. போக்கோ F7 ஸ்மார்ட்ஃபோனை பற்றி ஏற்கனவே BIS இணையதளத்தில் மாடல் எண் 2412DPC0AI உடன் சான்றிதழைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்ஃபோனின் விவரக் குறிப்புகள் பற்றி ஏதும் தெளிவாக தெரியவில்லை.
.