Last Updated:

விரைவில் வெளியிடப்பட உள்ள iQOO Neo 10R 5G டிவைஸைப் பற்றி இதுவரை நாம் அறிந்த தகவல்கள் குறித்து பார்ப்போம்.

News18

iQOO நிறுவனம் தனது iQOO 13 மொபைலின் அறிமுகத்திற்குப் பிறகு அடுத்ததாக பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. தற்போது கசிந்துவரும் தகவல்கள் உண்மையானால், நிறுவனம் விரைவில் இந்தியாவில் iQOO Neo 10R என்ற 5G மொபைலை அறிமுகப்படுத்தலாம்.

இந்த டிவைஸை நிறுவனம் விரைவில் இந்தியாவில் வெளியிட உள்ளதாக பிரபல டிப்ஸ்டரான பராஸ் குக்லானி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஸ்மார்ட் ஃபோனை விரைவில் வெளியிட நிறுவனம் தயாராகி வருவது குறித்த தகவல்களை அவர் தனது X போஸ்ட்டில் (முன்னர் ட்விட்டர்) குறிப்பிட்டு உள்ளார். விரைவில் வெளியிடப்பட உள்ள iQOO Neo 10R 5G டிவைஸைப் பற்றி இதுவரை நாம் அறிந்த தகவல்களைப் பார்ப்போம்.

அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 2025ல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் iQOO Neo 10R 5G ஆனது மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட் ஃபோன் மார்க்கெட்டை இலக்காக கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட் ஃபோன் iQOO Neo 10 சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த சீரிஸில் iQOO Neo 10 மற்றும் iQOO Neo 10 Pro ஆகியவையும் அடங்கும். iQOO Neo 10 ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகியுள்ளது. தற்போது Neo 10R இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iQOO Neo 10R 5ஜி மொபைலில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட் ஃபோன் 144Hz ரெஃப்ரஷ் ரெட் சப்போர்ட் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனுக்காக இதில் Snapdragon 8s Gen 3 சிப்செட் கொடுக்கப்படக்கூடும். மேலும், இந்த டிவைஸில் 12GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை 50MP Sony LYT-600 சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய டூயல் ரியர் கேமரா சிஸ்டமை எதிர்பார்க்கலாம். மேலும், இந்த மொபைலின் முன்பக்கம் செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 16MP செல்ஃபி ஷூட்டர் இருக்கும். மேலும், இந்த ஸ்மார்ட் ஃபோன் டூயல்-டோன் டிசைன் மற்றும் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஒரே ஆப் மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இணைப்பு… மெட்டாவின் சூப்பரான அப்டேட்…!

பேட்டரித் திறனை பொறுத்தவரை இதில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 6,400mAh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு உள்ளது. விலையைப் பொறுத்தவரை iQOO Neo 10R ஆனது ரூ.30,000 பட்ஜெட் செக்மென்ட்டை இலக்காக கொண்டு அறிமுகப்படுத்தப்படலாம். மேலும், இது அறிமுகமானால் Poco X7 Pro மற்றும் Redmi Note 14 Pro+ போன்ற பிரபலமான மொபைல்களுடன் போட்டியிடலாம்.



Source link