இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாள் பகைக்கு பழி தீர்க்கும் விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை குறி வைத்து ஈரான் ராணுவம் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.காசா, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்று நேற்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஈரான் தாக்குதல்

அதற்கு அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலம் உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

184 ஏவுகணைகளை வீசி தாக்குதல்

விளம்பரம்

டெல் அவிவ் நகருக்கு மேலே ஏராளமான ஏவுகணைகள் பறந்து சென்றதால், அங்குள்ள வான் பரப்பு முழுவதும் எரிகற்கள் விழுவது போன்று காட்சியளித்தது. இஸ்ரேல் மீது சுமார் 184 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான், இரவு 7.30 மணியளவில் தாக்குதலை நிறுத்தியது.

.



Source link