தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை பண்டிகையையும் ஆங்கில மாதமான டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது.

திருக்கார்த்திகை பண்டிகை அன்று இந்துக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி கடவுளுக்கு அப்பம் பணியாரம் போன்றவற்றைப் படையல் இட்டு வழிபாடு நடத்துவர். இதேபோன்று கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகத் தங்கள் வீடுகள் மற்றும் அருகில் உள்ள தேவாலயங்களில் குடில் அமைத்து, ஸ்டார்கள் தொங்கவிட்டு, வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

விளம்பரம்

இந்த இரண்டு பண்டிகைகளின் கொண்டாட்டத்திற்கும் சுக்குநாரி என்ற மூலிகை குணம் மிக்க புல்வகை முக்கிய பங்கு வகிக்கிறது. மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் சுக்குநாரி புல் அதன் நறுமணம் மற்றும் மூலிகைக்காகவே அதிகம் புகழ்பெற்றதாக உள்ளது.

இதையும் படிங்க: எலிக்கு எமன்… விவசாயிக்கு நண்பன்… 40 ஆண்டுகளாக விவசாயத்தைக் காக்க உழைக்கும் எலி மணி…

சுக்குநாரி குறித்து தோவாளை பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், “சுக்குநாரி என்று புல் வகை மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இது பெரும்பாலும் கார்த்திகை பண்டிகையின் போது பணியாரம் அவிக்கும் போது நறுமணம் மற்றும் மருத்துவ குணத்திற்காகச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி போடப்படுகிறது.

விளம்பரம்

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை குடில் அமைக்கும் பொழுது கோரைப் புற்களுடன் சேர்த்து குடில் அமைக்கப்படுகிறது. அப்படிச் செய்வதன் மூலம் குடிலில் ஒருவித நறுமணத்தையும் இது அளிக்கிறது. மேலும் இந்த சுக்குநாரி புல் தைலம் எடுக்கவும் பயன்படுகிறது. தலைவலி கை கால் வலி போன்றவற்றிற்காகத் தைலம் எடுக்க இது பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் இவை பறிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

திருக்கார்த்திகை பண்டிகையின் போது ஊர் மக்கள் சேர்ந்து இதைப் பறித்துச் செல்வார்கள். தற்பொழுது இதனைச் செய்வதற்குப் போதுமான ஆட்கள் இல்லாததால் இவை மலைப் பகுதிகளிலிருந்து பறிக்கப்பட்டு சந்தைகளில் ஒரு கட்டு 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.



Source link