Last Updated:
Jackie Chan | வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்தில் திறமை வாய்ந்த இந்திய தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க விரும்புவதாக ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.
இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஜாக்கி சான் தெரிவித்து உள்ளார்.
ஸ்டான்லி டோங் இயக்கத்தில் ஜாக்கி சான், லே ஜாங், ஆரிப் ரகுமான் உட்பட பலர் நடிப்பில் மான்டரின் மொழியில் ‘எ லெஜன்ட்ங’ என்ற பெயரில் ஜூலை 10, 2024ல் சீனாவில் வெளியானது. இந்த படம் தற்போது தமிழில் ‘விஜயபுரி வீரன்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. இந்த படம் தொடர்பாக ஜாக்கி சான் பேட்டியளித்துள்ளார். அதில், இயக்குநர் ஸ்டான்லி டோங்குடன் சேர்ந்து நிறைய ப்ராஜக்ட்ஸ் செய்துள்ளதாகவும், பழைய நண்பர்களை சந்தித்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், இந்தியா மட்டுமின்றி இத்தனை ஆண்டுகளில் உலகத்தில் எங்கு சென்றாலும் இந்திய ரசிகர்கள் தன் மனதை தொட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜாக்கி சான் கூறினார். தற்போது ட்ரெண்டில் உள்ள AI டெக்னாலஜியின் வளர்ச்சி தவிர்க்க முடியாததாக மாறியுள்ளதாகவும், பிலிம் இன்டஸ்ட்ரியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியதாகவும் கூறினார். மேலும், இதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி கடந்த காலங்களில் நம்மால் எட்ட முடியாததை தற்போது செய்ய முடியும் என்றார்.
“இந்திய இயக்குநர்கள், நடிகர்களுடன் பணியாற்ற விருப்பம்”
வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்தில் திறமை வாய்ந்த இந்திய இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும், மறுபிறவியில் சூப்பர் மேனாக பிறக்க விரும்புவதாகவும், உலகம் முழுவதும் அன்பையும், அமைதியையும் பரப்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, ‘விஜயபுரி வீரன்’ படம் குறித்து பாராட்டு அல்லது விமர்சனம் எதுவாக இருந்தாலும் தெரிவிக்குமாறு ரசிகர்களுக்கு கூறினார்.
January 03, 2025 3:54 PM IST