Last Updated:

jailer 2 | ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்துக்கு அனிருத் ரூ.18 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News18

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்துக்கு அனிருத் ரூ.18 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இவர்கள் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசை பக்கபலமாக அமைந்திருந்தது. அந்த திரைப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்காக அனிருத் 18 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார்.

இதையும் வாசிக்க: Vikram | விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் எப்போது? – படக்குழு வெளியிட்ட அப்டேட்

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் அனிருத் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஜெயிலர் திரைப்படத்தின் இசை உரிமை 25 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.

படத்தின் அறிவிப்பு மட்டும் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில் படத்தின் இசை 25 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தமிழில் உருவான ஒரு திரைப்படத்தின் இசை உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை.



Source link